MH370வை தேடும் புதிய முயற்சியா? மறுக்கும் போக்குவரத்து அமைச்சு

காணாமல் போன MH370 விமானத்தை கண்டுபிடிக்கும் புதிய முயற்சியை தாம் தொடங்கியுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை மலேசிய போக்குவரத்து அமைச்சு மறுத்துள்ளது. 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MH370 விமானத்தின் மாயம் அவிழ்க்க முடியாத மர்மமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், பிரிட்டைன்’ஸ் மேய்ல் வெளியிட்ட செய்தியில், கூடிய விரைவில் மாயமான விமானத்தை கண்டுபிடிக்க புதிய தேடுதல் வேட்டை ஒன்று தொடங்கப்படவுள்ளதாக கூறியிருந்தது. ஆஸ்த்ரேலியாவின் நியூஸ் கோர்ப் நிறுவனத்தை கோடி காட்டி எழுதிய பிரிட்டைன்’ஸ் மேய்ல், அந்த விமானத்தில் பயணித்த உறவினர்கள் மற்றும் மலேசிய அரசாங்கம் seabed searcher Ocean Infinity-யை பயன்படுத்தி அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கவுள்ளதாக கூறியிருந்தது.

இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்காக நாங்கள் வருந்துகிறோம்,  ஆனால், புதிய தேடுதல் வேட்டையை தொடங்கும் முயற்சி எதுவும் தற்போது அமைச்சுக்கு இல்லை என்றும் அப்படி தேடுதல் முயற்சியை தொடங்குவதற்கான புதிய ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 2 =