Tuesday, October 27, 2020
31.5 C
Kuala Lumpur
Home MALAYSIA

MALAYSIA

காதலனால் இளம் பெண் கொலை செய்யப்பட்டார்

செந்தூல், கம்போங் பாடாங் பாலாங் குடியிருப்பு பகுதியின் வீடொன்றில் இளம் பெண் கொலையுண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். நேற்று மாலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சந்தேகிக்கும்...

கொரோனா வைரஸ் ; மாண்டவர்களின் எண்ணிக்கை 425ஆக உயர்வு

சீனாவில்  கொரோனா வைரஸ் கிருமியின் பாதிப்பினால் மாண்டவர்களின் எண்ணிக்கை  425ஆக உயர்ந்துள்ளது. இந்த உயிர்க்கொல்லி கிருமியினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள  ஹூபே மாநிலத்தில் மட்டும்  கடந்த  24 மணி நேரத்தில்  புதிதாக  64 பேர் மாண்டதாக  சீனாவின் சுகாதார  ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு புதிதாக  3,235பேர்  கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக  கொரோனா வைரஸ்  இப்போது  20,400க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளதாக  சீனாவின் மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் கூறின. ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு மிக விரைவாக இந்த கிருமி பரவிவருவதாக  அமெரிக்க மருத்துவ நிபுணர் DR.   NANCY MESSONNIER கூறியுள்ளார். ஹூபேய் தலைநகர்   வூஹனுக்கு அருகேயுள்ள  ஒரு  மார்க்கெட் வட்டாரத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவிய இந்த கொரோனா வைரஸில் சீனாவுக்கு வெளியே ஜப்பான், தாய்லாந்து  சிங்கப்பூர், அமெரிக்கா பிரிட்டன் உட்பட  23 நாடுகளில்   குறைந்தது 123பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் தொடர்ந்து மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டிற்கு  எதிராக உலகின் பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருவதால் அனைத்துலக தொடர்பிலிருந்து சீனா தனித்து இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகின் பெரும்பாலான விமான நிறுவனங்கள் சீனாவிற்கான தங்களது விமான சேவையை  நிறுத்திக்கொண்டுள்ளன. ஐக்கிய அரபு சிற்றரசும்  சீனாவுக்கான தனது   விமான சேவையை  தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

புதர் மண்டிக் கிடக்கும் தாமான் ஸ்ரீ பந்திங்கில் பாம்புகள் படையெடுப்பு; அச்சத்தில் குடியிருப்பாளர்கள்

இங்கு பந்திங் நகரையொட்டிய தாமான் ஸ்ரீ பந்திங் வட்டாரத் தில் புதர் மண்டிக் கிடப்பதோடு, அப்பகுதியில் பாம்புகளின் படை யெடுப்பும் அதிகரித்து வருவதாக...

ஊழலை விசாரிக்க எம்ஏசிசிக்கு தாமதம் ஏன்?

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தில் நிலவும் ஊழலை விசாரிக்க ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தேவையற்ற கால தாமதத்தை ஏற்படுத்துவதாக...

கிள்ளான் தெங்கு கிளானாவில் பொங்கல் புத்தாண்டு விழா!

தமிழர்களின் மிகப்பெரிய வர்த்தகத் தளமாக விளங்கும் கிள்ளான், தெங்கு கிளானாவில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டு விழாவான பொங்கல் விழா கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்...

கார்டனியா பேக்கரி நிறுவனம் 325 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை அன்பளிப்பாக வழங்கியது

மலேசிய நம்பிக்கை பயனீட்டாளர் சங்கம், சா’ஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி இணை ஏற்பாட்டில் கார்டனியா பேக்கரி ஆதரவில் தமிழ்ப்பள்ளி மற்றும் தேசியப்பள்ளி உட்பட 12...

கெடாவில் நீர்விநியோகம் மார்ச் மாதம் வரை போதுமானது

கெடா மாநில மக்களுக்கான நீர்விநியோகம் மார்ச் மாதம் வரைக்கும் போதுமானதாக இருக்கும் என தேசிய நீர் சேவை வாரியத் (ஸ்பான்) ...

கொரோனா வைரஸ் மிரட்டலை சமாளிப்பதற்கு மலேசியா தயார் நிலை

மலேசியாவின் சுகாதார அமைச்சு காலதாமதமாக கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று சில தரப்பினர் கூறும்...

பக்காத்தானை விட மகாதீரிடம்தான் பாஸ் விசுவாசமாக இருக்கிறது

பிரதமரைக் கொண்டிருக்கும் பக்காத்தான் கூட்டணியை விட பாஸ் கட்சி, துன் மகாதீரிடம் மிகவும் விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டு வருவது நகைப்புக்கு...

Stay Connected

4,978FansLike
678FollowersFollow
1,345SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles

விவசாயத்துறையில் வெற்றிநடை போடும் இளம் விவசாயி கார்த்திக்

“தன் கையே தனக்கு உதவி” என்பதற்கேற்ப தனது சுய முயற்சியின் காரணமாக விவசாயத்துறையில் வெற்றி அடைந்துள்ளார் கெடா பீடோங் ரிவர்சைட் தோட்ட மண்ணின்...

சுற்றுப்பயண வழிகாட்டிகளின் சுமைகளை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு இடையில் தங்களின் தொழில்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக உரிமம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டிகளின் சுமைகளை குறைக்கும் நடவடிக்கைகளை மலேசியா உற்பத்தித்திறன் கழகம்...

கொரோனா இரண்டாம் அலை -ஸ்பெயினில் தேசிய அவசரநிலை பிரகடனம்

ஸ்பெயின் நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. நாட்டில் இதுவரை 11,10,372 பேருக்கு கொரோனா...

சிரியாவில் ரஷிய படைகள் வான்வெளி தாக்குதல் – துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 78 பேர் பலி

சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் சிரிய அரசுக்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது....

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திர விவகாரம் – ’கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை’ – பிரான்ஸ் அதிபர் பேச்சு

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி (47). இவர் கடந்த...