94 வயதிலும் நடனமாடி அசத்தினார்

விருந்துபசரிப்போடு கூடிய நன்கொடை திரட்டும் நிகழ்ச்சியில் 94 வயதிலும் நடனமாடி அசத்தியுள்ளார் பிரதமர் துன் மகாதீர்.தமது புதல்வி மரினா மகாதீருடன் அவர் நடனமாடிய 1 நிமிட வீடியோ பதிவு, வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு பாராட்டைப் பெற்றது. ரோங்கெங் இரவு நன்கொடை திரட்டும் நிகழ்ச்சி என பெயரிடப்பட்ட அதில், மகாதீர் மலாய்ப் பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். டாக்டர் சித்தி ஹஸ்மா வயலின் வாசித்துப் பாராட்டைப் பெற்றார். அவ்விருந்து நிகழ்ச்சியில் அரசின் முன்னாள் மூத்த அதிகாரிகளும் வெளிநாட்டுத் தூதர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =