92.8 மில்லியன் உள்நாட்டு சுற்றுப்பயணிகளை அடுத்தாண்டு முழுவதும் இலக்காக கொண்டு மலேசிய விமான நிறுவனத்தின் (மாஸ்) ஒத்துழைப்போடு சிறப்பு விடுமுறை பேக்கேஜை சுற்றுலாத் துறை நேற்று அறிமுகப்படுத்தியது.
நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது இந்த உள்நாட்டு சுற்றுப்பயணிகள் 76.9 பில்லியன் வெள்ளியை செலவழிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டின் 85.2 மில்லியன் உள்நாட்டு சுற்றுப் பயணிகளோடு ஒப்பிடுகையில் அடுத்த ஆண்டின் இலக்கான 92.8 மில்லியன் என்பது 8.9 சதவீதம் ஏற்றமாகும் என்று சுற்றுலாத்துறையின் தலைமை இயக்குநர் மூசா யூசோஃப் கூறினார்.
மாஸூடன் ஒத்துழைப்பது உள்நாட்டு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை மேலும் வலிமைப்படுத்தும்.
உள்நாட்டு சுற்றுப்பயணிகள் நமது சுற்றுலா துறைக்கு மேலும் வலிமையை ஏற்படுத்துவர் என்று மூசா யூசோஃப் கூறினார். மாஸ் போன்ற நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மலேசியா வருகை புரியுங்கள் ஆண்டில் நமது இலக்கான 30 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பணிகளையும் 100 பில்லியன் வெள்ளி வருமானத்தையும் ஈட்டலாம்.