82 அடி உயர பீப்பாயில் 78 நாட்களாக தங்கியிருந்த நபர்

0

தென் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவர் வெர்னன் க்ரூகர். இவர் உயரமான கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் அதிக நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்தவர். கடந்த 1997ம் ஆண்டு 25 மீட்டர் உயர இரும்பு கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கியிருந்து கின்னஸ் சாதனை படைத்தார். இந்நிலையில், தற்போது 82 அடி உயர இரும்பு கம்பத்தின் உச்சியில் பொருத்தப்பட்ட பீப்பாயில் 78 நாட்கள் தங்கியிருந்து தனது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார்.

இவரது முயற்சிக்காக 82 அடி உயர கம்பத்தின் உச்சியில் சுமார் 132 கலன் கொள்ளளவு உடைய பீப்பாய்(பேரல்) பொருத்தப்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் மேலே சென்ற வெர்னன் க்ரூகர் 78 நாட்கள் 23 மணி மற்றும் 14 நிமிடங்கள் மேலே தங்கியிருந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் கீழே இறங்கினார். இதுகுறித்து வெர்னன் கூறுகையில் ‘வேறோரு நபர் இந்த சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம். என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 3 =