800 பேரின் வாழ்க்கைப் பிரச்சினை இது-உத்துசானை மூடவேண்டாம்

0

நாட்டின் மூத்த மலாய் நாளேடான உத்துசானை மூடுகின்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் நேற்று கேட்டுக்கொண்டார். இது 800 தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே அதை நடத்தக்கூடிய ஒருவரின் கையில் ஒப்படைத்து, பொருளாதார நிலையில் சீர்குலைந்துள்ள அந்நிறுவனத்தை மீட்டெடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இந்தச் செய்தி தொடர்பான முழு விவரங்களைப் பெற உத்துசான் நிறுவனத்தின் விளக்கங்களுக்காக நான் காத்திருக்கிறேன். எனினும் எப்படியாவது இதை மூடாமல் அது செயல்பட வழிகாணுங்கள் என்பதுதான் என் கோரிக்கையாக இருக்கும். தகுதியுள்ளவர்களின் கையில் இதை ஒப்படைக்கலாம்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விவகாரமாக இது இருப்பதால் முறைப்படி அவர்கள் அமைச்சிடம் அதுபற்றிச் சொல்ல வேண்டும். இதுவரை அவர்கள் அதிகாரப்பூர்வமாக இதைத் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களுக்கான இழப்பீடு கேட்டு மனு செய்யலாம்.

குறிப்பாக சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ் அவர்களுடைய சம்பளத்தை வைத்து இழப்பீடு வழங்க முடியும். அவர்களுக்கான மாற்று வேலைகளையும் ஏற்பாடு செய்து தரலாம் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − seven =