800 ஆண்டுகளில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை

800 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகளவில் ஒரு நாடாளுமன்ற சபாநாயகர் மாற்றப்பட்ட சம்பவம் இப்போதுதான் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில்லை என்று முன்னாள் சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப் தெரிவித்தார். பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் சார்பில் பிரதமராக இருக்கும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று சபாநாயகரையும் துணை சபாநாயகரையும் அகற்றும் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் 2 வாக்குகளில் வெற்றிபெற்றதால் சபாநாயகர் டான்ஸ்ரீ முகமட் அரிப்பும் துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கும் பதவி இழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கருத்துரைத்த டான்ஸ்ரீ முகமட் அரிப், 800 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படியொரு சம்பவம் நிகழவில்லை. இதுதான் முதல் முறை என்றார்.
தாய்லாந்து மற்றும் டுபோக்கோ டிரினாட் நாட்டில் சபாநாயகர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் மாற்றபட்டனர்.
ஆனால், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி காலம் முடிவடைவதற்குள் அவர் மாற்றப்பட்டிருப்பது 800 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.
இருப்பினும் இந்த முடிவை மதிக்கிறேன். பதவி விலகுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =