80ரூ மாணவர்கள் முதல் மருந்தளவு தடுப்பூசியைச் செலுத்தி விட்டனர்

நாட்டில் இதுவரை கோவிட் முதல் மருந்தளவு தடுப்பூசியை 12 முதல் 17 வயதிற்குட்பட்ட 80 விழுக்காட்டு மாணவர்கள் செலுத்தி விட்டதாகக் கல்விக்கான மூத்த அமைச்சர், டத்தோஸ்ரீ டாக்டர் ரட்சி ஜிடின் தெரிவித்தார். கடந்த மாதத் தொடக்கத்திலிருந்தே பதின்ம வயதினருக்கான பிக் திட்டம் தொடங்கப்பட்டதில் சுகாதார அமைச்சுடன் அணுக்கமான ஒத்துழைப்பைக் கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகிறது. மாணவர்களுக்கான பிக் அமலாக்க தகுதி சம்பந்தப்பட்ட தகவலை ஏற்படுத்திக் கொடுப்பதில் மிகச் சிறந்த அணுகுமுறைகளை ஆய்வு செய்வது குறித்து இரு அமைச்சுகளும் கலந்துரையாடலை நடத்தி விட்டன. அத்தகவலைப் பொது மக்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம். கோவிட்நாவ் இணைய தளத்தில் கல்வி அமைச்சின் கீழுள்ள பள்ளிகள் ரீதியிலான தடுப்பூசிகளுக்கான விளக்கமளிப்பு குறித்தப் புதிய அம்சங்களைச் சுகாதார அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தப் புதிய அம்சங்கள் வாயிலாகத் தங்கள் பிள்ளைகளின் தடுப்பூசி விகிதம் குறித்துப் பெற்றோர்கள் அல்லது பதுகாவலர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். இம்முயற்சி பொதுமக்களுக்குத் துல்லியமானத் தகவல்களை ஏற்படுத்திக் கொடுப்பது மட்டுமின்றி இது தடுப்பு நடவடிக்கைக்கான இறுதிக் கட்ட அணுகுமுறைகளின் ஒரு பகுதியாகும் என்று தம்து முகநூலில் கெத்தேரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ரட்சி ஜிடின் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 4 =