8 மாதங்களில் 42 நிலங்கள் விற்கப்பட்டுள்ளன

    கூட்டரசுப் பிரதேச அமைச்சராக அனுவார் மூசா பதவி வகித்த 8 மாதங்களில் மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான 42 நிலங்கள் விற்கப்பட்டுள்ளதாக செராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கொக் வாய் குற்றஞ்சாட்டினார்.இந்த நிலங்கள் அவசரப்பட்டு விற்கப்பட்டதா? அல்லது வழக்கமான நடைமுறையில் விற்கப்பட்டதா? என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அனுவார் மூசா கூட்டரசுப் பிரதேச அமைச்சர் பதவி வகித்தது முதல் மாநகர் மன்றத்திற்குச் சொந்தமான பல நிலங்கள் வீடமைப்பு, வர்த்தக மற்றும் இதர திட்டங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார். குறுகிய காலத்தில் இந்த நிலங்களின் விற்பனைக்கு அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என ஜசெக தலைவருமான அவர் சொன்னார். இந்த மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்ற நிலையில் அனுவார் ஏன் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என அவர் வினவினார். இந்த நிலங்களின் விற்பனை வெளிப்படைக் குத்தகைகளின் வழி விற்கப்பட்டதா என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என்றார் அவர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    one × 2 =