8ஆவது பிரதமராக முஹிடின் பணியை தொடங்கினார்

நாட்டின் 8ஆவது பிரதமராக டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று காலை பிரதமர் அலுவலகத்தில் தமது அதிகாரப் பூர்வ பணியை தொடங்கினார்.

நேற்று காலை 8 மணியளவில் பிரதமர் அலுவலகத்தை கொண்டிருக்கும் பெர்டானா புத்ரா கட்டிடத்தை வந்தடைந்த முஹிடினை, அரசாங்க தலைமை செயலாளர் முகமட் ஸுக்கி வரவேற்றார்.

பிறகு அங்கிருந்து பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 5ஆவது மாடிக்கு அவரை முகமட் ஸுக்கி அழைத்துக் சென்றார். தொழுகைக்கு பிறகு பணியை தொடங்கும் புத்தகத்தில் முஹிடின் கையெழுத்திட்டார்.

கடந்த வாரம் திங்கட்கிழமை பக்காத்தான் ஹராப்பான் அரசாங் கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து புதிய கூட்டணி அரசாங்கத்திற்கு முஹிடின் தலைமையேற்றார். நாட்டின் 8ஆவது பிரதமராக நேற்று முன்தினம் இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா முன்னிலையில் பெர்சத்து தலைவருமான முஹிடின் பதவி உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − one =