76,000க்கும் மேற்பட்ட நிதி நிவாரண விண்ணப்பங்களுக்கு எம்.பி.எஸ்.பி வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது


நாடு முழுவதும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான (எஸ்.எம்.இ) வசதிகளை மறுசீரமைத்தல் உள்ளிட்ட 76,139 நிதி நிவாரண விண்ணப்பங்களுக்கு எம்.பி.எஸ்.பி வங்கி நிறுவனம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மே 31 வரை வாங்கப்பட்ட இந்த மொத்த விண்ணப்பங்களும் ரிம. 9.13 பில்லியன் மதிப்பாகும்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) 3.0 அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் நிதி நெருக்கடியை குறைக்கும் வகையில் தனிநபர் மற்றும் வணிக வாடிக்கையாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக எம்.பி.எஸ்.பி வங்கி நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 3.0 எங்கள் வாடிக்கையாளர்களில் சிலரை பாதித்துள்ளது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த சவாலான காலங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்” என்று அது அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட குழுக்களுக்கு மூன்று மாத கால அவகாசம் அல்லது மாத தவணைத் தொகையைக் குறைப்பதற்கான விருப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசினின் அண்மைய அறிவிப்புக்கு இணங்க இது இருப்பதாக வங்கி மேலும் கூறியது.
க்ஷயவேரயn ளுயசய ழனைரயீ (க்ஷளுழ) அல்லது க்ஷயவேரயn ஞசihயவin சுயமலயவ (க்ஷஞசு) பெறுநர்கள் மூன்று மாத கால அவகாசம் பெற தகுதியுடையவர்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு 50 சதவீதம் குறைக்கப்பட்ட மாதாந்திர கொடுப்பனவைப் பெற தகுதியுடையவர்கள். அதே நேரத்தில் மைக்ரோ வணிகர்களும் அதே உதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எம்.பி.எஸ்.பி குறிப்பிட்டிருந்தது.
மாத வருமானத்தில் குறைப்பை அனுபவித்த வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்களுக்கு வருமானக் குறைப்புக்கு ஏற்ப மாதாந்திர கொடுப்பனவுகளைக் குறைக்கலாம் என்றும் அது கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டில் அல்லது 2021 ஆம் ஆண்டில் வேலையில்லாமல் இருந்த தனது வாடிக்கையாளர்களுக்கு எம்.பி.எஸ்.பி வங்கி பல உதவிகளையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
“அவர்கள் மூன்று மாத கால அவகாசத்திற்கு விண்ணப்பிக்கலாம் அல்லது ஆறு மாதங்களுக்கு 50 சதவீதம் குறைக்கப்பட்ட மாதாந்திர கொடுப்பனவுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்“ என்று அது கூறியுள்ளது.
மேல் விவரங்களுக்கு வாடிக்கையாளர்களை தனது வாடிக்கையாளர் சேவை மையத்தை 03-2096 3000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எம்.பி.எஸ்.பி வங்கி அறிவுறுத்தியது. அதே நேரத்தில், சிறு, நடுத்தர நிறுவனங்கள் அதன் நிதி நிலை குறித்து விரிவான ஆலோசனைக்கு எம்.பி.எஸ்.பி வங்கியை தொடர்பு கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன. மாறாக, அவர்கள் எம்.பி.எஸ்.பி வங்கியின் வலைத்தளத்தை (றறற.அளெbயெமே.உடிஅ) பார்வையிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + eight =