7ஆவது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மீதான விழிப்புணர்வை ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து ஏற்படுத்தும்

7ஆவது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா மீதான விழிப்புணர்வை ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து ஏற்படுத்தும்

July 2021 — அண்மையில் ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு மனித உருமாற்றத்தில் சக்திவாய்ந்த ஆற்றலை ஏற்படுத்துவதற்கு ஈஷா மலேசிய இயக்கம் பல்வேறு யோக நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது.
தனிப்பட்ட நபர்களிடையே விழிப்புணர்வு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் அறிவியல் ரீதியிலான தீர்வை வழங்குவதில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈஷா அறநிறுவனம் முதன்மையாளராக பணியாற்றி வருகிறது. 5 நிமிடங்களுக்கு யோகா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி, அன்பு, வெற்றி மற்றும் மனநல ஆரோக்கியத்தை பெறுவதற்கு முக்கிய பங்காற்ற முடியும்.
நமது பரபரப்பான நவீன வாழ்க்கையில் நம்மை தயார்படுத்திக் கொள்வதற்கும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உணர்ந்து கொள்வதற்கும் யோகா அற்புதமான கலையாக திகழ்கிறது. சத்குருவால் வடிவமைக்கப்பட்டு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான நகர்கள் மற்றும் கிராமங்களிலும் யோகா கலை பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் யோகா ஈடு இணையற்ற நன்மைகளை கொண்டு வருவதற்காக யோகா பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தொற்று பரவலை கருத்திற்கொண்டு நோய் எதிர்ப்பு மற்றும் ஆரோக்கியம் என்ற கருப்பொருளில் இஷா மலேசியா கவனம் செலுத்தவிருக்கிறது. 2021 ஆம் ஆண்டின் அனைத்துலக யோக தினத்தை முன்னிட்டு சில முக்கிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
• ஆரோக்கியத்திற்கு யோகா
• நோய் எதிர்ப்புக்கு யோகா
• யோகா ஆரோக்கியம் (சுறுசுறுப்பு & விளையாட்டுக்கு)
• நோய் எதிர்ப்புக்கும் & அமைதிக்கும் யோகா ( முன்களப் பணியாளர்களுக்கு)
• நோய் எதிர்ப்புக்கு யோகா ( சிறார்களுக்கு )
• நோய் எதிர்ப்பு & அமைதிக்கு யோகா ( பெரியோருக்கு )

கோலாலம்பூர், இந்திய தூதரகத்துடன் ஒத்துழைப்பு
இந்தியத் தூதரகத்துடன் இணைந்து ஜூன் 20 ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஆறு மணி வரை நோய் எதிர்ப்புக்கான யோகா என்ற கருத்தரங்கை இணைய வாயிலாக ஈஷா மலேசியா நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றது. இந்த நிகழ்வில் தூதர் மற்றும் சத்குருவின் பதிவு பெற்ற உரையும் இடம்பெற்றிருந்ததோடு நோய் எதிர்ப்பு சக்திக்கான மற்றும் பிராணவாயுவை மேம்படுத்தும் எளிய யோகா பயிற்சியும் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து மீண்டும் 2021 , ஜூன் 27ஆம் தேதியும் உள் மன ஆற்றலை அதிகரிக்கும் நோக்கத்தை கொண்ட மெய்நிகர் யோகா பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மெய் நிகர் மூலமாக யோகா வீர பயிற்சியை சில தொண்டூழியர்கள் மேற்கொண்டதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு சக்திவாய்ந்த யோகா பயிற்சிகளையும் அவர்கள் வழங்க முன்வந்தனர். அனைத்துலக யோகா தினத்தை முனிட்டு வார இறுதியில் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக இந்த யோக பயிற்சி அமைந்துள்ளது.

கூட்டாக இணைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்
ம.இ.காவின் தேசிய மகளிர் பகுதி, மற்றும் தாமான் டேசா ரியாவிலுள்ள தமிழ் இளைஞர் மணிமன்றம் போன்ற சில உள்ளூர் இயக்கங்களுடன் இணைந்து குறிப்பாக தமிழ் மொழியில் மெய் நிகர் மூலமாக யோகா பயிற்சிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஏபெக் வட்டாரம் மற்றும் மலேசியாவில் அதிகமான பங்கேற்பாளர்கள் பதிவு செய்து இந்த நிகழ்வில் நன்மை அடைந்துள்ளனர்.
யோகா பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் மனிதர்களின் ஒட்டுமொத்த மனநல ஆரோக்கியத்தை வலுப்படுத்திக்கொள்ள முடியும் . அமைதியான உடலுக்கான உடல் மற்றும் மனோ ரீதியிலான ஆரோக்கியமான உணர்வுகளையும் பெறமுடியும். இப்போதைய சவால் நிறைந்த நோய் தொற்று வேளையில் சுறுசுறுப்பான உடலுக்கும், தசைகளை வலுப்படுத்தவும் , உடல் அசைவு, சுவாசிப்பதில் முன்னேற்றம், உடல் சக்தி மற்றும் உயிர்சக்தியையும் மேம்படுத்திக்கொள் முடியும். வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு யோகா ஆசனங்கள் மன அழுத்தம் மற்றும் கவலையை குறைத்து நிதானத்தோடு செயல்படுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது.

வேலையிடத்திற்கான யோகா
நமது தினசரி வாழ்க்கையில் யோகாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டதைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களுக்கு கவச்சிகரமான ஏற்பாடுகள் அல்லது திட்டங்களுடன் யோகா திட்டத்தை ஈஷா அறநிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. இப்போதைய சவால் நிறைந்த காலத்தில் நமக்கு மட்டுமின்றி நம்மை சுற்றி உள்ளவர்களுடனும் ஆதரவாக இருப்பதற்கு மன ஆரேக்கியத்தை சிறப்பாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். 60 நிமிடங்களுக்கான யோகா பயிற்சியின் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு மேலும் புத்துணர்வை கொடுப்பதாக இருக்கும். யோகாவுக்கு முன் அனுபவம் தேவையில்லை. ஒரு இடமும் யோகவுக்கான பாய் மட்டுமே தேவையாகும். நாற்காலியில் அமர்ந்த நிலையில்கூட சிலர் யோகா பயிற்சியில் ஈடுபட முடியும். ஈஷா அறக்கட்டளையால் தீவிர பயிற்சிபெற்ற அர்ப்பணிப்பு கொண்ட யோகா ஆசிரியர்கள் இந்த பயிற்சியை வழங்குகின்றனர்.
பதிவுக்கான மேல் விவரங்களை அறிந்துகொள்வதற்கு Corporate. apac@ishafoundation.org அல்லது https://isha.sadhguru.org/global/en என்ற அகப்பக்கத்திற்கு வலம் வரலாம்,

நாங்கள் யோகா என்று சொல்லும்போது சாத்தியமற்ற ப்ரி ஸ்டைல் போஸ் என்று அர்த்தமல்ல. நாங்கள் குறிப்பிடுவது இதுவல்ல. யோகா என்றால்சரியான இசைக்குரியதாக இருக்க வேண்டும். உங்கள் உடல் , மனம் , ஆற்றல், மற்றும் இடுப்பு ஆகியவை முழுமையாக இணக்கத்துடன் உள்ளன. -சத்குரு.

https://isha.sadhguru.org/global/en

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =