600 சுகாதாரத் துறை ஊழியர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிப்பு

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் 600க்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை ஊழியர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா கூறினார்.
இவர்களில் 406 பேர் அரசாங்க மருத்துவமனை ஊழியர்கள். இதர ஊழியர்கள் தனியார் மற்றும் பல்கலைக்கழக மருத்துவப் பணியாளர்கள் ஆவர்.
கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இவர்களுக்கு, அமைச்சு உளவியல் ஆதரவுப் பயிற்சி உட்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவர்கள் மனநல மருத்துவ நிபுணர்களிடம் அனுப்பப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படுவதோடு சிகிச்சையும் அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
நேற்று இங்கு உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவர் இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − nine =