60 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம்!- மகாதீர்

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளில் 60 விழுக்காடு நிறைவேற்றப்பட்டுவிட்டதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது உரையில் கூறினார்.

“நாங்கள் வாக்குறுதியளித்தவற்றில் 60 விழுக்காடு ஏற்கனவே நிறைவேற்றி விட்டோம். நிச்சயமாக முழுமையாகவும் இல்லை. எங்களின் சில வாக்குறுதிகள் 100 விழுக்காட்டை எட்டியுள்ளது. சில குறைந்த விழுக்காட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்து வருவதாக மெர்டேகா சென்டரின் அறிக்கை குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறினார்.

மெர்டேகா செண்டரின் ஆய்வு முடிவுகளை தாம் சரியானது என்று நம்பவில்லை என்று அவர் கூறினார்.

ஆய்வுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து நம்பிக்கைக் கூட்டணியின் புகழ் விகிதம் 35 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று அது குறிப்பிட்டிருந்தது.

கடந்த ஆண்டு 14-வது பொதுத் தேர்தலின் போது நம்பிக்கைக் கூட்டணி 87 விழுக்காடு புகழ் விகிதத்தைப் பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 2019-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதன் விகிதம் தீவிரமாக குறையத் தொடங்கியது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − 19 =