6 வங்கி ஊழியர்கள் தடுத்து வைப்பு


தனிநபர் வங்கிக் கடனுக்காக விண்ணப்பித்தவர்களிடம் கையூட்டு கேட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக, 6 வங்கி ஊழியர்கள் நேற்று தொடங்கி 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கிள்ளான் வட்டாரத்திலுள்ள வங்கிகளில் பணிபுரிந்த வந்த அந்த அறுவரும், கடன் பெறத் தகுதி பெறாதவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு கைமாறாக கையூட்டு கேட்டதாக நம்பப்படுகிறது.
1கோடியே 80 லட்சம் ரிங்கிட்டை உட்படுத்திய சுமார் 110 கடன் விண்ணப்பங்களை அங்கீகரிக்க 15 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரையில், அந்த வங்கி ஊழியர்கள் கையூட்டு வாங்கியதாக நம்பப்படுகிறது. 36 முதல் 45 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவர்களின் வீட்டிலிருந்து 69,000 ரிங்கிட் ரொக்கமும் விலையுயர்ந்த கடிகாரங்களும் கைத்தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =