500 கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் தயாரிக்கும் பணி- தோட்டக்கலை பணியாளர்கள் தீவிரம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், நீலகிரியில் விளையும் ஸ்ட்ராபெர்ரி, பேரி, பிளம்ஸ் ஆகியவை மட்டுமின்றி, திராட்சை, ஆரஞ்ச், பைன் ஆப்பிள் போன்றவற்றை கொண்டு பழரசம் தயாராகிறது.


கொரோனா பாதிப்பால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 500 கிலோ ஜாதிக்காயில் ஊறுகாய் செய்யப்பட்டு வருகிறது. அரை கிலோ ஜாதிக்காய் ஊறுகாய் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தோட்டக்கலை பணியாளர்கள், முக கவசம் அணிந்து ஊறுகாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கொழுப்பை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்த புற்று நோயை தடுப்பதிலும் ஜாதிக்காய் பயன்படுகிறது. மேலும், வயிற்று வலி, வாயுத்தொல்லை உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − 1 =