50 வருட போராட்டம் 46 குடும்பங்களுக்கு நிலப்பட்டா!

    நிலப்பட்டா வேண்டி சுமார் 50 வருடங்களாக பேராக் மாநில அரசிடம் போராடி வந்த 46 குடும்பங்களுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டது இந்த நிலப்பட்டா வழங்கும் நிகழ்வு லாருட் மாத்தாங் நில அலுவலக ஏற்பாட்டில் நேற்று காலை இங்கு கம்போங் போயான் பல் நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் கித்தாதோப்பு என்றழைக்கப்பட்ட (துப்பாய்மாஸ்) புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 19 குடியிருப்பாளர்களுக்கும் அசாம் கும்பாங் பகுதியில் குடியிருக்கும் 5 குடியிருப்பாளர்களுக்கும் நிலப்பட்டா வழங்கப்பட்டது. மாநில மந்திரி பெசாரின் அசியல் செயலாளர் டத்தோ ஷம்மாட் ஷஹாட், குடியிருப் பாளர்களுக்கு நிலப்பட்டாவை எடுத்து வழங்கினார் லாருட் மாத்தாங் மாவட்ட நில அலுவலக அதிகாரிகளுடன் தைப்பிங் வட்டார மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பொறுப்பாளர்கள், மஇகா தைப்பிங் தொகுதி துணைத் தலைவர் எம்.வீரன் ஆகியோர் கலந்து கொண்டனர் 22 சீனர்களுக்கும் நிலப்பட்டா வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    10 − 1 =