5 முதல் 11 வயது வரையுள்ள சிறாருக்கு ஜனவரியில் தடுப்பூசி

சிறார்களுக்கான தடுப்பூசி பரிசோதனை பதிவு நிறைவு; ஆய்வு விரைவில் தொடங்கும் சிங்­கப்­பூ­ரில் ஐந்து முதல் 11 வயது வரையுள்ள சிறார்­க­ளுக்கு வரும் ஜன­வ­ரி­யில் இருந்து கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும் வாய்ப்பு இருப்­ப­தாக மருத்­துவச் சேவை­கள் துறை இயக்­கு­நர் கென்­னத் மாக் நேற்று தெரி­வித்­தார். தேசிய தடுப்­பூசித் திட்­டத்தை இத்­த­கைய வய­துள்ள சிறார்­க­ளுக்­கும் நீட்­டித்து அதன் மூலம் தொற்­றில் இருந்து அவர்­க­ளைக் காப்­பது தொடர்பில் கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர் குழு­வு­டன் தொடர்ந்து தாங்­கள் பணி­யாற்றி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். இதன்­ தொ­டர்­பில் தேவைப்­படும் ஒழுங்­கு­முறை அங்­கீ­கா­ரம் குறித்து ஃபைசர் நிறு­வ­னத்­து­டன் சுகா­தார அமைச்சு செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் இணைப் பேரா­சி­ரி­யர் மாக் தெரி­வித்­தார். கொவிட்-19 அமைச்சுகள் நிலை பணிக்­குழு செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பேசிய அவர், 12 வய­துக்குக் குறைந்த சிறார்­க­ளுக்குத் தொற்று ஏற்­படும் ஒரு போக்கு தலை­காட்டி இருப்­ப­தா­கக் கூறி­னார். வெள்­ளிக்­கி­ழமை நில­வ­ரப் ­படி கொரோனா தொற்று ஏற்­பட்­ட­வர் ­களில் சிறார்­களின் விகி­தம் 11.2ரூ ஆக இருந்­ததை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். இத­னி­டையே, கொவிட்-19 தடுப்­பூசி போடப்­படும் சிறார்­க­ளின் உடலில் எத்­த­கைய விளை­வு­கள் ஏற்­படும் என்­பதைத் தீர்­மா­னிப்­பதற்­காக நடத்­தப்படும் ஒரு பரி­சோ­தனைக்­கான பதிவு நிறை­வ­டைந்து­விட்­ட­தா­க­வும் ஆய்­வு­கள் விரை­வில் தொடங்­கும் என்றும் கேகே மாதர், சிறார் மருத்­து­வ­மனை தெரிவித்தது. அந்த ஆய்­வில் ஐந்து முதல் 11 வய­து வரையுள்ள 150 சிறார்­களை உள்­ள­டக்­கு­வது என்ற இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருப்­ப­தா­க­வும் அந்­தச் சிறார்­கள் ஏறத்­தாழ 15 மாத காலம் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் அந்த மருத்­து­வ­ம­னை­யின் சிறார் மருத்­து­வத் துறை­யைச் சேர்ந்த தொற்­று­நோய் சேவைப் பிரி­வின் மூத்த ஆலோ­ச­க­ரான டாக்­டர் யுங் சீ ஃபூ கூறி­னார். ஆய்­வுக்கு சுகா­தார அமைச்சு ஆதரவு அளிக்­கிறது. கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக் ­கொள்­ளும் சிறார்­க­ளின் உட­லில் பாது­காப்­பும் நோய் தடுப்­பாற்­ற­லும் எந்த அள­வுக்கு ஏற்­படும் என்­பதை மதிப்­பி­டு­வது ஆய்­வின் நோக்­கம். ஆய்­வின் மூலம் தெரிய வரு­ப வை, சிங்­கப்­பூ­ரில் சிறார்­க­ளுக்­கான பொதுச் சுகா­தார தடுப்­பூசி கொள்­கைக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­யாக இருக்­கும் என்று டாக்டர் யுங் தெரி­வித்­தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − eleven =