5 மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் அடைமழையினால் ஜொகூர், கெடா, பேரா, பினாங்கு, சிலாங்கூர் ஆகிய 5 மாநிலங்களில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளது.
இந்த வெள்ளமட்ட உயர்வால் 559 குடும்பங்களைச் சேர்ந்த 1,974 பேர் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக ’நட்மா எனப்படும் தேசிய வெள்ள நிவாரண பாதுகாப்பு முகவர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது.
அதில் ஜொகூர் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் வகையில் பத்து பஹாட், கூலாய் ஜெயா, ஜொகூர்பாரு, குளுவாங், பொந்தியான் ஆகிய பகுதிகளில் தற்காலிக துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று பேரா மாநிலத்தில் ஹிலிர் பேரா, பத்தாங் பாடாங், கெரியான் ஆகிய பகுதிகளிலும் கெடா மாநிலத்தில் கூலிம், பெண்டாங் ஆகிய பகுதிகளிலும் சிலாங்கூர் மாநிலத்தில் கோல சிலாங்கூரிலும் பினாங்கு மாநிலத்தில் செபெராங் பிறையிலும் துயர் துடைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நட்மா கூறியிருந்தது.
இதையடுத்து எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்குகிறதோ அங்கு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் அங்கு தங்குவதற்கான வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரும் எனவும் அது கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here