48 மணி நேரத்தில் 10 குழந்தைகள் பலி

0

கோட்டா:ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள மருத்துவமனையில், 48 மணி நேரத்தில், 10 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கோட்டா மாவட்டத்தில் உள்ள, ஜே.கே.லோன் மருத்துவமனையில், இம்மாதம், 23 மற்றும் 24ம் தேதிகளில், 48 மணி நேரத்தில், 10 குழந்தைகள் உயிரிழந்தன.பிறந்த, 14 நாளான குழந்தை முதல், 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலியானது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் அசோக் கெலாட் கூறியதாவது:இந்த ஆண்டு, மாநிலத்தில் குழந்தைகள் பலியாவது குறைந்து உள்ளது. சராசரியாக, ஓர் ஆண்டில், 1,300 – 1,500 குழந்தைகள் உயிரிழக்கும். இந்தாண்டு, 900 குழந்தைகள் மட்டுமே பலியாகின. ராஜஸ்தான் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், குழந்தைகள் இறப்பது புதிதல்ல. இருப்பினும், இது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கோட்டா லோக்சபா தொகுதியின் எம்.பி.,யான, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த சம்பவத்துக்கு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மாநில அரசை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இதற்கிடையே, மாநில பா.ஜ., மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழுவினர், மருத்துவமனைக்கு நேரில் சென்று, நிலைமை குறித்து விசாரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 12 =