409 பள்ளிகள் மூடப்பட்டன

0

நாட்டில் புகைமூட்டத்தின் அளவு மோசமடைந்து வருவதால் 409 பள்ளிகள் இதுவரை மூடப்பட்டிருக்கின்றன. இந்த புகை மூட்டத்தின் மாசு படலம் மிக அதிகமாக இருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் 15 இடங்களில் புகை மூட்டத்தின் அளவு ஆரோக்கியமற்ற முறைக்குச் சென்றது. பத்துமூடா (170), செராஸ் (159), புத்ராஜெயா (144), பெட்டாலிங் ஜெயா ( 149), ஷா ஆலம் (140), கிள்ளான் (160), ஜொகூர் செத்தியா (160), பிந்தாங் (121), போர்ட்டிக்சன் (105), நீலாய் (152), சிரம்பான் (121) புக்கிட் ரம்பாய் (103), அலோர் காஜா(102), தங்காக் (116), ரொம்பின் (196) என்ற அளவில் பதிவாகியது.
’ஏபிஐ எனப்படும் மாசு அளவுப்படி 0 -50 வரை சிறந்தது. 51 முதல் 100 வரை மிதமானது. 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றது. 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றது. 300க்கு மேற்பட்ட நிலை மிகவும் அபாயகரமானது. காற்றின் தூய்மைக்கேடு மோசமடைந்துள்ளதால், அந்தந்த இடங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சிலாங்கூர் சுகாதார இலாகா நேற்று கேட்டுக்கொண்டது.
தேவையில்லாமல் வெளியே நடமாட வேண்டாம். நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 5 கிளாஸ் குடிநீரை அருந்துங்கள். வெளியில் போகும்போது முகக் கவசம் அணியுங்கள் என்று அந்த இலாகாவின் இயக்குனர் டாக்டர் காலிட் இப்ராஹிம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − ten =