40 உணவு விநியோகிப்பாளர்களுக்கு மழைக் கால உடைகள் அன்பளிப்பு

நாளை 16.9.2021 புதன்கிழமை கொண்டாடப்படும் நாட்டின் 58 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு 40 உணவு விநியோகிப்பாளர்கள் மழைக் கால உடைகளை அன்பளிப் பாகப் பெற்றனர். நேற்று காலையில் இங்கு டத்தாரான் பந்திங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெங்கேரா பெலியா சிலாங்கூர் அமைப்பின் தலைவர் (மோரிப் தொகுதி) தயாளன் குணசேகரன் உணவு விநியோகிப்பாளர்களிடம் மழைக் கால உடைகளை வழங்கினார். தேசிய தினத்தை வரவேற்கும் நடவடிக்கையில் இதற்கான ஏற்பாடுகளை தாம் முன்னின்று செய்ததாக அவர் கூறினார். இது தொடர் மழைக்காலமாக இருப்பதால் வாடிக்கையாளர்களைத் தேடி மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கும் வேளையில் இவர்கள், இது போன்ற நேரங்களில் மழையால் சிரமத்தை எதிர் நோக்கலாம். இதைக் கவனத்தில் கொண்டு தாம் இந்த அன்பளிப்பை இவர்களிடம் வழங்கியதாக தயாளன் கூறினார். மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் இளைஞர் அமைப்பின் மாநில துணை இயக்குநர் பக்ரின் அபுபக்கார் கோலலங்காட் நாடாளுமன்றத்தின் பிரதிநிதி அப்பிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − eight =