3,877 போலி சமூக வலைத்தள கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன

0

’எஸ்கேஎம்எம் எனப்படும் மலேசிய தகவல், பல்லூடக அமைச்சு ஆணையம் கடந்த செப்டம்பார் மாதம் வரை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையில் பொதுமக்களுக்கு பாதகத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் 3,877 சமூக வலைத்தள கணக்குகள் கண்டறியப் பட்டுள்ளதாகவும் அதில் 78 விழுக்காடு கணக்குகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
இதில் பெரும்பாலான கணக்குகள் போலியான பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கணக்குகள் மட்டுமின்றி அதன் உள்ளடக்கக் கூறுகளும் உண்மைக்குப் புறம்பானதாகவே உள்ளதாக நேற்று மக்களவையில் அவர் விவரித்தார்.
இந்த 78 விழுக்காடு போலி சமூக வலைத்தள முடக்கத்துக்கு அந்தந்தப் பிரிவு அதிகாரிகள் பேராதரவு வழங்கியிருந்தனர். இதில் பெரும்பாலான கணக்குகள் மதம் சார்ந்து இழிவுபடுத்தக்கூடிய தகவல்களை வெளியிட்டிருந்தன. அதிலும் சில கணக்குகள் அரசாங்கத்தையும் உயர் அதிகாரிகளையும் மாமன்னரையும் கூட இழுத்துவிட்டிருந்ததாக அவர் கோடிகாட்டினார்.இதனிடையே எழுவரின் சமூக வலைத்தள கணக்குகளை அமைச்சு காரணமின்றி முடக்கியது ஏன் என்று தேமு பெரா தொகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
வருங்காலங்களில் போலி கணக்குகளை பதிவு செய்யாமல் இருக்கக்கூடிய நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுக்கும். அதை தீவிரமாகவும் கண்காணிக்கும். அதையும் தாண்டி போலி யான கணக்குகளைக் கொண்டிருப் பவர்கள் மீது கடுமையான நடவடிக் கை எடுக்கும் என்று பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் கோபிந்த் எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 10 =