375,925 பேர் உயர் கல்விக்கடனை திரும்பச் செலுத்தவில்லை

’பிடிபிடிஎன் எனப்படும் உயர் கல்விக் கடனைப் பெற்ற 375,925 பேர் இதுவரை கடனைத் திரும்பச் செலுத்தவில்லை என கல்வி துணையமைச்சர் தியோ நீ சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உயர் கல்விக்கடனை புதிதாகப் பெறுபவர்களுக்கு ஆண்டுதோறும் 3.7 பில்லியன் வெள்ளியிலிருந்து 4.3 பில்லியன் வெள்ளிவரை உயர்கல்வி நிதியகம் செலவிட்டு வருவதாக அவர் சொன்னார்.
உயர் கல்விக்கடனைப் பெறும் 30 லட்சம் பேருக்கு 72.1 பில்லியன் வெள்ளியை பிடிபிடி என் ஒதுக்கீடு செய்துள்ளதாக நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
இந்தத் தொகையில் 36.5 பில்லியன் வெள்ளி அரசாங்கக் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் 35.4 பில்லியன் வெள்ளி தனியார் கல்விக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
உயர் கல்விக்கடனை திரும்பச் செலுத்தாதவர்கள், கடனைத் திரும்பச் செலுத்த பிடிபிடிஎன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =