31 தேர்தல் குற்றங்களை பக்காத்தான் புரிந்துள்ளது

அண்மையில் நடந்து முடிந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் 31 தேர்தல் குற்றங் களை புரிந்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே 2.0 கூறியது.
இவற்றில் 21 தேர்தல் குற்றங்கள், 10 தவறான செயல்கள் என பெர்சே அறிக்கை ஒன்றில் கூறியது.
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலை கண்காணிக்க 5 கண் காணிப்பாளர்களை பெர்சே 2.0 அனுப்பி இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் அமைச்சர்கள் மற்றும் ஜொகூர் மந்திரி பெசார் அரசாங்க சாதனங்
களை தவறாக பயன்படுத்தி யுள்ளனர்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் கொள்கைகளை பக்காத் தான் ஹராப்பான் அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கை கூறியது.
கடந்த நவம்பர் 16ம் தேதி நடந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 15 ஆயிரம் வாக்குகள் பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =