31 கோடியை வழங்கும்படி ரொனால்டோ மீது வழக்கு


தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போர்த்துகலைச் சேர்ந்த பிரபல கோல்மன்னன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 கோடியே 60 லட்சம் பவுண்ட்ஸ் (மலேசிய வெள்ளி 31 கோடியே 90 லட்சம்) வழங்கும்படி மாடல் அழகி கெத்ரின் மயோகாரா வழக்குத் தொடுத்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு லாஸ் வெகாஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ரொனால்டோ தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2010ஆம் ஆண்டில் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த புகாரை மீட்டுக் கொள்ள 2 லட்சத்து 70,000 பவுண்ட்ஸ் தொகையை பெற்றுக் கொள்ள கெத்ரின் முன் வந்தார்.
ஆனால், இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை. என் பெயரை கெடுக்கவும் பிரபலமாகுவதற்கும் கெத்ரின் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று ரொனால்டோ குறிப்பிட்டார். 24 வயதாக இருக்கும்போது ஒரு கிளப்பில் என்னை ரொனால்டோ சந்தித்தார். பின்னர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றஞ்சாட்டிய கெத்ரின், போலீஸ் புகாரில் ரொனால்டோ பெயரை குறிப்பிடவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த புகார் கோப்பை போலீசார் மீண்டும் திறந்துள்ளனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ தமக்கு 5 கோடியே 60 லட்சம் பவுண்ட்ஸ் தொகையை வழங்க வேண்டும் என்று கெத்ரின் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + 10 =