3,000 பள்ளிகளை வீழ்த்தி வென்றது லாடாங் எலைஸ் தமிழ்ப்பள்ளி

இந்த ஆண்டு, ஜொகூரில் உள்ள லாடாங் எலைஸ் தமிழ்ப்பள்ளி, ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் 2020 (குசடிப றுடிசடன ஊhயஅயீiடிளோiயீ 2020) எனும் பட்டத்தை வென்றது. இதனை தொடர்ந்து, ஃபுரடெரிக் கோஃப் பள்ளி மற்றும் யார்ட்லீஸ் பள்ளி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தன.
“இந்த ஆண்டின் ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் பட்டத்தை லாடாங் எலைஸ் தமிழ்ப்பள்ளி வென்றதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். உலகெங் கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளுக்கு எதிராக போட்டி
யிடுவது எளிதான சாதனையல்ல. லாடாங் எலைஸில் உள்ள ஆசிரியர்
கள் மற்றும் மாணவர்களின் அர்ப் பணிப்பையும் விடாமுயற்சியையும் பாராட்டியே ஆக வேண்டும்.
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப்புக்காக மாணவர்களை வீட்டிலிருந்தே தயார்ப்படுத்தினர். பள்ளி மூடப்
பட்ட போதிலும், அப்பள்ளி மாணவர்களின் கற்றல் தடையின்றி தொடர்ந்ததை இது காட்டுகிறது” என்று ஃபுராக் ஆசியாவின் நிர்வாக இயக்குனர் லூ யோ கூறினார்.
இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் 13 நாடுகளில் 3,000 க்கும் மேற்பட்ட பள்ளிகள் 18 மில்லியனுக்கும் அதிகமான கேள்விகளை முடித்தன.
கோவிட்-19 தாக்கம் ஒருபுறம் இருக்க அனைத்து மாணவர்களும் இப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்க் கொண்டனர். இந்த பயணம் யுனைடெட் கிங்டமில் தொடங்கி மலேசியாவில் முடிந்தது.
“ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப்பின் போது, மின் கற்றல் சாதனங்களுக்கான அணுகல் ஒரு பெரிய தடையாக இருந்தது. அப்பிரச்சினையை தீர்க்க நாங்கள் பல முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது. மாணவர்களின் சுமையைக் குறைக்க நாங்கள் ஒரு மின் கற்றல் திட்டத்தைத் தொடங்கினோம். நான் ஒவ்வொரு நாளும் என் வீட்டில் வகுப்புகளை நடத்தினேன்.
போக்குவரத்து பிரச்சினை களைக் கொண்ட மாணவர்களின் வீட்டிற்கு நானே சென்று வகுப்புகளை நடத்தினேன்.
“நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (எம்.சி.ஓ) காலகட்டத்தில் பள்ளி மடிக்கணினிகளில் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். எங்கள் மாணவர்கள் எம்.சி.ஓ காலகட்டத்தில் கூட ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப்பிற்காக எங்களுடன் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து பல பயிற்சிகளை மேற்கொண்டனர்” என்று லாடாங் எலைஸின் ஆசிரியரான ஈஸ்வரன் கூறினார். லாடாங் எலைஸ் தமிழ்ப்
பள்ளியைச் சேர்ந்த 6 ஆம் ஆண்டு மாணவி சுரேஷின் தாயார் கோமளா, இ-கற்றல் மீது முழு நம்பிக்கை கொண்ட ஒரு பெற்றோர். அச்சிட்ட புத்தகங்களை படிக்க விரும்பாத தனது மகனைப் போன்ற குழந்தைகளுக்கு, டிஜிட்டல் கற்றல் நிச்சயமாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார்.
ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் என்பது 2018 முதல் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு சர்வதேச போட்டியாகும். இது உலகளவில் 15 நாடுகளில் 7,000 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பங்கேற்பைப் பெற்றுள்ளது. ஃபுரோக் கல்வி என்பது அமெரிக்காவுடன் இணைந்து ஃபரோக் ஆசியாவால் வழங்கப்படும் ஒரு கற்றல் முறையாகும். ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் விடாமுயற்சியுடன் கலந்து கொண்டு மொத்தம் 10,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இந்த சாம்பியன்ஷிப், ஃபுரோக் தளத்தில் இருக்கும் பிற நாடுகளின் கலாசாரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, சர்வதேச ஃபரோக் பயனர்களிடையே சமூக உணர்வை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதற்கிடையில், ஜூன் 2020 இல், ‘குசடிபஹளயை குசடிபஞடயல’ என்ற புதிய பிரசாரத்தை குசடிபஞடயல இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் நேரடி போட்டி தளத்தில் ஈடுபடுத்த உதவியது.
ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரை அனைத்து தேசிய பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும் ஒரு சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றிபெற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும் பங்கேற்க வேண்டும்.
ஆசிரியர்களின் வழிகாட்டல் களுடன் மாணவர்கள் முடிந்தவரை பல ஃபுரோக்கின் வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரிம70,000 க்கும் அதிகமான மதிப்புள்ள ரொக்கப் பரிசுகள் மற்றும் புத்தக பற்றுச்சீட்டுகளை வெல்லும் வாய்ப்புகளைப் பெறலாம்.
ஃபுரோக் ஆசியா சாம்பியன்ஷிப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, றறற.கசடிபஉhயஅயீiடிளோiயீள.உடிஅ எனும் அகப்பக்கத்தைப் பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − six =