30ஆவது சீ விளையாட்டு – நிர்மாணிப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை

0

30ஆவது சீ விளையாட்டு போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டின் மனிலாவில் 30ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது. இந்நிலையில், சீ விளையாட்டு போட்டியின் நிர்மாணிப்பு பணிகள் இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளன. அதனை முழுமைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காற்பந்து, போலோ போன்ற விளையாட்டுக்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தாலும் விளையாட்டு அரங்குகளில் நிர்மாணிப்பு பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

மேலும், விளையாட்டாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஏற்பாட்டு குழுவினர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. சீ விளையாட்டு போட்டியை பிலிப்பைன்ஸ் நாடு ஏற்று நடத்துவது இது நான்காவது முறையாகும்.

நவம்பர் 30 தொடங்கி டிசம்பர் 11 வரை நடைபெறும் இந்த சீ போட்டியில் மொத்தம் 56 போட்டிகளில் 10 ஆசியான் நாடுகள் மற்றும் திமோர் லெஸ்தேவைச் சேர்ந்த 8000க்கும் அதிகமான போட்டியாளர்கள் இதில் கலந்துக்கொள்ளவுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + 3 =