3 வயது சிறுவனை குரங்கு தாக்கியது

மூன்று வயது நிறைந்த பாலகனை குரங்கு ஒன்று தாக்கியதில் அவன் பலத்த காயங்களுக்கு இலக்கானான்.
ரொம்பின் முவாட்ஸான் ஷா நெடுஞ்சாலை அருகில் உள்ள ஓர் உணவகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் சைட் நூர் அக்திப் கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவன் அருகில் வந்த ஒரு குரங்கு பலமாகத் தாக்கியதுடன் கடித்தது.
உணவை எடுப்பதற்காகச் சென்ற தாயாருக்கு மகன் ஓலமிடும் சத்தம் கேட்டு வந்தபோது, அங்கு குரங்கு தன் மகனைத் தாக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்று அதைத் துரத்தியதாக அம்மாவட்ட காவல்படைத் தலைவர் அஸாரி மிஸ்குன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் அந்தச் சிறுவனுக்கு 2 கால்கள், தலைப்பகுதி என பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகாமட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இது குறித்து அவ்வட்டார வன இலாகாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அஸாரி மிஸ்குன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =