253 புதிய ஏர்பஸ்கள் A321 நியோ ரக விமானங்கள் கொள்முதல்

0

விமான சேவையில் உலகளாவிய பல சாதனைகளை புரிந்துவரும் ஏர் ஆசியா நிறுவனம், புதிதாக 253 எண்ணிக்கையில் நியோ ரக விமானங்களை கொள்முதல் செய்துள்ளது. இதன்வழி தனது விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள ஏர் ஆசியா, பயணிகளுக்கான சேவைகளையும் மேம்படுத்தும்.
ஜெர்மனியின் துறைமுக நகரமான ஹம்பர்க்கில் அமைந்துள்ள ஏர்பஸ் கட்டுமான நிறுவனத்தில் இந்த புதிய விமானத்தின் முதல் விமானம் வழங்கும் வைபவம் நேற்று விமரிசையாக நடந்தது.
’தற்போது அனைவரும் பறக்கலாம்’ என்பது ஏர் ஆசியாவின் கருப்பொருளாகும். இதை மையமாகக் கொண்டு இந்த புதிய கொள்முதலை ஏர் ஆசியா மேற்கொண்டுள்ளது. இதனால் நிறுவனத்திற்கும் பயணிகளுக்கும் பல நன்மைகள் உள்ளன என்று ஏர் ஆசியாவின் நிர்வாகி மார்ட் விளக்கினார்.
வழக்கத்தை விட சிறிதும் பெரிதுமான இருக்கை, கூடுதலாக 50 இருக்கைகள், 20 விழுக்காடு எரிபொருள் சேமிப்பு, கூடுதலான தொடர்ந்து பறக்கும் நேரம் ஆகியவை இந்த புதிய ஏர்பஸ் ஹ321 நியோவின் சிறப்பு அம்சமாகும்.
இதனால் பயணிகளுக்கு குறைந்த விலையில் பயணச் சேவையும் புதிய தலங்களுக்கு பயணத்தையும் ஏர் ஆசியாவினால் வழங்க முடியும் என்று அதன் அதிகாரி மாட் நேற்று நடந்த விழாவில் தெரிவித்தார்.


ஒரு குறிப்பிட்ட தலத்தின் வழியான பயணத்தில், வழக்கத்திற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் வாய்ப்பு அமையும் போது பயணிகளுக்கான சேவை கட்டணத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் சில நேரங்களில் விலையை குறைப்பதற்கும் நிறுவனத்திற்கு வாய்ப்புள்ளது என்று அவர் விளக்கினார். மேலும் எரிபொருள் பயன்பாட்டில் 20 விழுக்காடு சேமிப்பு இருப்பதனால், இதுவும் நிர்வாக செலவினங்களை குறைப்பதுடன் பயணிகளுக்கு அதன் பலனை திருப்பி வழங்கும் வாய்ப்பையும் வழங்குகிறது என்று அவர் கூறினார்.
ஜெர்மனியின் ஹம்பர்க்கில் நடைபெற்ற சரித்திரப் பூர்வ விமான ஒப்படைப்பு வைபவத்தை தொடர்ந்து, முதல் ஹ321 நியோ விமானம், ஏர்பஸ் கட்டுமான நிறுவனத்தின் தளத்தில் இருந்து, கோலாலம்பூரை நோக்கி தனது வெள்ளோட்ட பயணத்தை மேற்கொண்டது.
இந்த விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு குதூகல உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் வெளிப் பார்வைக்கு களிப்பூட்டும் வகையிலும் வர்ண சாயங்கள் பூசப்பட்டுள்ளன.
உலகின் முதல் நிலை சலுகை விலை விமான நிறுவனம் என்று முத்திரை பதித்து உள்ளது ஏர் ஆசியா. இந்த கொள்முதல் வழி அதிக எண்ணிக்கையிலான ஏர்பஸ் விமானங்களை கொண்ட நிறுவனமாக ஏர் ஆசியா உயர்கிறது.
அந்த விமானம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும். இதில் சிறப்பு பயணிகள் குழுவில் தமிழ் மலரின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சரஸ்வதி கந்தசாமியும் பயணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் தனது வர்த்தக பயணத்தை 23.11.2019 முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =