250 நடுவர்களை சிலாங்கூர் கால்பந்து சங்கம் உருவாக்கும்

அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் 250 நடுவர்களை சிலாங்கூர் கால்பந்து சங்கம் உருவாக்கும். சிலாங்கூரில் கால்பந்து ஆட்டங்களை கண்காணிப்பதற்காக அந்த நடுவர்கள் உருவாக்கப்படுவார்கள் என சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் நடுவர் நிர்வாகக் குழுவுக்கான உதவித் தலைவர் அப்துல் பஷித் தெரிவித்தார்.
நடுவர் பணிக்கு இளைஞர்களை கவர்வதற்காக பல்வேறு திட்டங்கள் வரையப்பட்டிருப்பதாகவும் இந்த திட்டங்களை அமல்படுத்தப்படுவதன் மூலம் அதிகமான இளைஞர்கள் கால்பந்து நடுவர்களாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அவர் சொன்னார். இளைஞர்கள் பகுதி நேரமாக இந்த பணியை மேற்கொள்வதற்கு அவர்களை தயார்படுத்துவற்கான நடவடிக்கையில் நாங்கள் ஈடுபடுவோம் என அவர் சொன்னார்.
கால்பந்து நடுவராக பணியாற்றுவதன் மூலம் இளைஞர்கள் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அப்துல் பஷித் கூறினார். அடுத்த ஆண்டு சிலாங்கூர் பிரிமியர் லீக் போட்டிக்கான நடுவர் கருத்தரங்கை தொடக்கிவைத்தப் பின் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார். அதோடு சிலாங்கூரில் பெண்களும் கால்பந்து நடுவர்களாக பணியாற்றவதற்கான முயற்சிகளையும் சிலாங்கூர் கால்பந்து சங்கம் துரிதப்படுத்தி வருவதாகவும் அப்துல் பஷித் தெரிவித்தார்.
தற்போது கால்பந்து நடுவர்துறை நல்ல வளர்ச்சி கண்டிருப்பதால் பெண்களும் இத்துறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் சொன்னார். அடுத்த ஆண்டு சிலாங்கூர் கால்பந்து சங்கத்தின் லீக் போட்டியில் கலந்துகொண்டு நடுவர் பணிகளை கவனிப்பதற்காக 174 நடுவர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். சிலாங்கூர் கால்பந்துக் சங்கத்தின் நடுவர் குழு தலைவர் சந்திரசேகரன் தொடக்கிவைத்த இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் கால்பந்து குழுவின் பயிற்சியாளர் பி.சத்தியநாதனும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + three =