2,484 ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன

0

தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் மொத்தம் 2,484 ஆபாச வலைத்தளங்களை தடை செய்துள்ளது.
தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா துணை அமைச்சர் டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிடின் கூறுகையில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 2018 முதல் இவ்வாண்டு ஜூன் 30 வரை, ஆபாச உள்ளடக்கம் தொடர்பாக மொத்தம் 125 விசாரணை ஆவணங்கள் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
“எனவே, சமூக நலத்தை பேணுவதில் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் முக்கியமான பங்கை வகிக்கின்றது” என்று அவர் கூறினார். ஆபாச கலாசாரத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு சமூக ஊடக நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
சமூக ஊடக தளங்களான முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஆபாச வீடியோக்கள் உண்மையில் ஒரு குற்றமாகும் என்று அவர் கூறினார். “மேலும், ஆபாச வீடியோக்களை தடை செய்யும் வகையில் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் பல விதிமுறைகளை அறிமுகப்படுத்தும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 10 =