24 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும்

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டால், சுமார் 24 லட்சம் மலேசியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம் கூறுகிறது. கோவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பால் பெரிய எண்ணிக்கையிலான மலேசியர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் அறிக்கை ஒன்று கூறியது. இந்த சூழ்நிலையில் நாட்டில் குடும்ப வருமானம் 12 விழுக்காடாக வீழ்ச்சி காணும். இதன் மதிப்பு வெ.95 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இதனைச் சமாளிக்க புத்ராஜெயா ஒரு நெருக்கடி பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிறுவனங்கள் திவாலாகாமல் இருப்பதைத் தடுக்கவும் மலேசியர்கள் வேலைகளை இழப்பதைச் சமாளிக்கவும் இந்த நெருக்கடி பட்ஜெட் அவசியம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + eight =