2020 ஆண்டில் சுற்றுப் பயணிகளுக்கு சிறப்பு வரவேற்பு

0

மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2020 ஆண்டை யொட்டி 299 பயணிகளுக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஎ) சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2020ஆம் ஆண்டு வெற்றியடைய அனைத்து மலேசியர்களும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று இந்த சிறப்பு வரவேற்பிற்கு வருகை புரிந்த சுற்றுலா, கலை, கலாசார அமைச்சர் டத்தோ முகம்மடின் கெத்தாப்பி கேட்டுக் கொண்டார்.

மாநில மற்றும் மத்திய நிலையைச் சார்ந்தவர்கள் மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் ஆண்டு வெற்றியடைய இணைந்து செயலாற்றுவர் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் கெத்தாப்பி. மலேசியாவிற்கு வருகை புரியுங்கள் 2020 பிரசாரத்தை நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது, இவ்வாண்டில் 30 மில்லியன் அனைத்துலக சுற்றுப் பயணிகளை கவரும் மற்றும் சுற்றுலாத் துறையில் 100 பில்லியன் வெள்ளியை ஈட்டும் இலக்கை அரசாங்கம் கொண்டுள்ளது என்றார்.

அபுதாபியிலிருந்து வந்த எதிஹாட் ஏர்வேய்ஸைச் விமானத்தில் பயணித்த 299 பயணிகளுக்கு சிறப்பு டோக்கன்கள் வழங்கப்பட்டன. பாரம்பரிய நடனங்களுடன் அவர்கள் வரவேற்கப்பட்டனர். கேஎல்ஐஏ தவிர நாட்டி லுள்ள 22 வாயில்களிலும் பயணிகளுக்கு இது போன்ற வரவேற்பு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine − seven =