2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் வீட்டு சந்தைகள் வீழ்ச்சியடைந்தன

வீட்டுவசதி சந்தை நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வீழ்ச்சியடைந்துள்ளன என்றும் குடியிருப்பு அல்லாத சொத்துகளின் வாடகை வருமானமும் குறைந்துள்ளன என்றும் தேசிய வங்கி ஆணையம் தெரிவித்துள்ளது.
மலேசிய விலை குறியீட்டின் படி (எம்.எச்.பி.ஐ), குடியிருப்பு சொத்துப் பிரிவில் வீட்டின் விலைகள் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2.2 சதவீதம் பதிவு செய்திருப்பதாகவும், இவ்வாண்டின் முதல் பாதியில் 1.1 சதவீதம் பதிவு செய்திருப்பதாகவும், இது கடந்த ஆண்டோடு ஒப்பிடும் பொழுது மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்திருப்பதாகவும் மத்திய வங்கி ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 170,000 யூனிட்டுகளுக்கு உயர்ந்துள்ளன.
அதில் பெரும்பாலானவை இன்னும் கட்டுமானத்தில் உள்ளவையாகும் என்ற விவரத்தையும் தேசிய வங்கி ஆணையம் பகிர்ந்துள்ளது.
இந்த தொற்றுநோயினால் ஏற்பட்ட குறைந்த வருமானம், வீட்டின் தேவைகள் குறைந்துள்ளன என்று தேசிய வங்கி ஆணையம் அறிவித்துள்ளது.
அதோடு, தேசிய வங்கி ஆணையம் கொள்கை விகிதத்தைத் தவிர்த்து மீண்டும் வீட்டு உரிமையாளர் பிரசாரத்தை (எச்ஓசி) அறிமுகப்படுத்த வேண்டும் என்று தற்போது கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்வழி வீடு வாங்குதலுக்கான விண்ணப்பங்களை அதிகரிக்க முடியும் என்றும் தேசிய வங்கி ஆணையம் கூறியுள்ளது.
இதனை கடந்த ஜூன் மாதம் கடன் விண்ணப்ப வளர்ச்சியில் ஏற்பட்ட வலுவான மீட்சியின் வழி அறிய முடிகிறது என்றும் தேசிய வங்கி சுட்டிக்காட்டியது.
அதோடு, கடன் வாங்கி பாதிக்கக்கூடிய நபர்களுக்கு தானியங்கி கடன் தடை, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நிவாரண உதவிகள் போன்றவை வழங்கப்படுகின்றன என்று மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =