2019 ஆம் ஆண்டில் மலேசியா ரிம22.5 மதிப்புள்ள மர தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது

மலேசியா கடந்த ஆண்டு ரிம22.5 பில்லியன் மதிப்புள்ள மர பொருட்களை ஏற்றுமதி செய்ததாக பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் கைருதீன் அமாட் ரசாலி தெரிவிட்தார்.
இந்த தொகையில் தளவாடங்கள் தயாரிப்புகள் ரிம9.14 பில்லியனாகவும் பலகை பொருட்கள் ரிம3.40 பில்லியனாகவும் மற்றும் மரத்தாலான மரக்கன்றுகள் ரிம3.37 பில்லியனாகவும் பதிவு செய்துள்ளது.
“இந்த ஆண்டு ஏற்றுமதியின் மதிப்பு அதிகரிக்கும் அல்லது குறைந்த பட்சம் கடந்த ஆண்டின் எண்ணிக்கையுடன் பொருந்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த ஏற்றுமதி பி40
சமூகத்தினரின் வருமானத்தை உயர்த்துவதோடு தோட்டப்புறங்களில் வீழ்ச்சியடைந்து வரும் மர வகைகளின் விநியோகத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாக முகமட் கைருதீன் தெரிவித்தார்.
“மரங்களின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, வேகமாக வளர்ந்து வரும் மர வகைகளான படாய் மற்றும் யூகலிப்டஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதையும்,
மூலப்பொருட்களுக்காக அதிக மரங்களை நடுவதையும் பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் பொருட்கள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
“யூகலிப்டஸ் மரங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ரிம3 பில்லியனைப் பதிவு செய்தது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக, கோவிட்-19 தொற்றுநோயால் இதன் மதிப்பு ரிம1.49 பில்லியனாக குறைந்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.
யூகலிப்டஸ் மரம் கனமான, வலுவான, நீடித்த மற்றும் திடமான மரத்தை உற்பத்தி செய்கிறது. இது உலகின் மிக மதிப்புமிக்க மரக்கன்றுகளை உருவாக்குகிறது. ஆக இதன் மதிப்பு வெளிநாடுகளில் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா, நியூ கினியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மொத்தம் 822 யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.
“இந்த இனங்கள் கூழ், காகிதம், கரி ஆகியவற்றிற்கு மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகின்றன. இது வேகமாக வளர்ந்து 100 மீட்டர் உயரத்தை எட்டக்கூடியது மற்றும் உலகின் மிக உயர்ந்த மரம் என்று கூறப்படுகிறது.
ஆக, எதிகாலத்தில் யூகலிப்டஸ் மரங்களின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 2 =