20,000 சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்றம்

இவ்வாண்டு ஆறு மாதங்களில் குடிநுழைவு தடுப்பு முகாமில் தடுத்த வைக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் தெரிவித்தார்.
தாயகம் திருப்பி அனுப்பி வைக்
கப்பட்டவர்களில் 5,613 இந்தோனே சியர்கள், 3,990 மியன்மார்கள், 2664 வங்காளதேசிகள் அடங்குவர்.
மற்ற நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளும் அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க எல்லைகளில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − five =