2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த 3 அடி உயர ராட்சத கிளி

0

வெல்லிங்டன்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்கலைக்கழக போராசிரியரும், புதைபடிவ நிபுணருமான ட்ரெவர் வொர்த்தி, நியூசிலாந்தின் தெற்கு பிராந்தியமான ஒட்டாகோவில் புதைபடிவ ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவர் அங்கு 1 கோடியே 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத கிளியின் புதைபடிவங்களை கண்டெடுத்தார். அந்த கிளியின் உயரம் ஒரு மனிதனின் சராசரி உயரத்தின் பாதிக்கும் மேலானது ஆகும். அதாவது அந்த கிளி சுமார் 3½ அடி உயரத்தில் 7 கிலோ எடையில் இருந்திருக்கும் என கூறப்படுகிறது.

கிளியின் அசாதாரண உயரம் மற்றும் வலிமையை அங்கீகரிக்கும் வகையில் அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என பெயரிட்டுள்ள ஆய்வாளர்கள் அந்த கிளி எப்படி இருந்திருக்கும் என்ற யூகத்தில் ஒரு மாதிரி படம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

இதுகுறித்து ட்ரெவர் வொர்த்தி கூறுகையில், “ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடசை விட பிரமாண்டமான கிளிகள் உலகில் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த கிளி இனம் வழக்கமான கிளிகளை விட அதிக உணவுகளை உட்கொண்டு வாழ்ந்திருக்கலாம். ஒருவேளை சக கிளிகளையே அது இரையாக எடுத்திருக்கலாம் என நம்பப்படுகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × five =