1993ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சட்டத்திற்கு முரணானது

0

1993இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தில் ஆட்சியாளர்களுக்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை விதிப்பதில் இருந்து விதிவிலக்களிக்கும் உரிமை ரத்து செய்யப்பட்டது.
அந்த சட்ட விலக்களிப்பை மறுபடியும் நிலை நிறுத்தும்படி மேலவைத் தலைவர் பதவியை விட்டு விலகும் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நேற்று கேட்டுக் கொண்டார்.
டேவான் நெகாராவிற்கு வழங்கிய பிரியாவிடை உரையில் மஇகாவின் தேசியத் தலைவருமான அவர், இவ் வேண்டுகோளை விடுத்தார். 1993இல் செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட திருத்தங்கள் சட்டத்திற்குப் புறம்பானது. ஏனெனில் ஆட்சியாளர்களின் மாநாட்டு அனுமதி பெறாமலேயே அவை நிறைவேற்றப்பட்டன. இந்த திருத்தங்கள் மலாய் ஆட்சியாளர்களின் அதிகாரங்களைக் குறைத்து விட்டன என்று அவர் சொன்னார்.
ஆட்சியாளர்கள் அமைப்பின் இறையாண்மை நிலைநிறுத்தப்பட வேண்டும். நான் தவறுதலாகக் கூறியிருந்தால்
திருத்திக் கொள்ள
விரும்புகிறேன். சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில் மலாய் ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை நாம் மறுபடியும் நிலைநாட்ட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 18 =