1985லிருந்து மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனங்கள் எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை

0

மலேசிய செம்பனை எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பாக ’ஆர்எஸ்பிஓ எனப்படும் வட்டமேசை நீடித்திருக்கும் செம்பனை எண்ணெய் நிறுவனத்தின் உறுப்பினர்கள், 1985 லிருந்து வெளி எரிப்பு நடவடிக்கைகளைத் தங்கள் தோட்ட நிறுவனங்களில் செயல்படுத்தவில்லை. ஆர்எஸ்பிஓ கடந்த 2004இல்தான் நிறுவப்பட்டது என மலேசிய செம்பனை எண்ணெய் சங்கத்தின் (எம்பிஓஓ) செயல்முறை அதிகாரி நஜீப் வஹாப் நேற்று பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
அதற்கு பதிலாக பல மலேசிய நிறுவனங்கள் செம்பனை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டும் முறையினைப் பயன்படுத்தி வருகின்றன. அவற்றுள் கோலாலம்பூர் கெப்போங் பெர்ஹாட் (கேஎல்கே) சைம் டார்பி பிளாண்டேஷன் பெர்ஹாட் (எஸ்டிபி), கெந்திங் பிளாண்டேஷன் பெர்ஹாட் போன்ற நிறுவனங்கள் அடங்கும்.
வெட்டப்பட்ட மரத்துண்டுகளைப் பல இடங்களில் போட்டுவிடுவார்கள். காலம் சென்றவுடன் அவை உரமாக மாறிவிடும். அந்த முறை 1985இல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து அவர்கள் இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார்.
அண்மையில் ஏற்பட்ட புகைமூட்டத்திற்கு இந்தோனேசியாவில் இயங்கும் மலேசிய நிறுவனங்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது தொடர்பில் கருத்துரைத்த நஜீப் வஹாப், இந்தக் கூற்றில் உண்மையில்லை என்றார்.
உண்மையில் தீ மற்ற இடங்களில் இருந்து மலேசிய நிறுவனங்களின் தோட்டங்களுக்குப் பரவியது. அவர்களிடம் நவீன வசதிகள் இருந்ததால், அத்தீயை அவர்கள் அணைத்துவிட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.
தீச் சம்பவங்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் செம்பனை எண்ணெய் தோட்டங்கள் காரணம் அல்ல. காட்டுத்தீ சம்பவங்கள் ரஷ்யா, ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 15 =