18,355 சட்டவிரோத குடியேறிகள் கைது

0

1 ஜனவரி முதல் நேற்று முன்தினம் வரைக்கும் 18,355 சட்டவிரோத குடியேறிகள் குடிநுழைவுத் துறை கைது செய் துள்ளது என்று அதன் இயக்குநர் டத்தோ கைருல் டிஸாய்மி டாவுட் கூறினார்.
70,907 பேர் மீது மேற்கொள் ளப்பட்ட சோதனையில் பல நாடு களைச் சேர்ந்த இந்த சட்ட விரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டனர் என்று டத்தோ கைருல் தெரிவித்தார்.
இவர்களில் அதிகபட்சமான வர்கள் அதாவது 7018 பேர் இந்தோனேசியர்கள் ஆவர். தொடர்ந்து வங்காளதேசிகள் 3060 பேரும் மியன்மார் பிரஜை கள் 2401 பேரும் பிலிப் பைன்ஸ் பிரஜைகள் 1478 பேரும் தாய்லாந்து பிரஜைகள் 1180 பேரும் இந்திய பிரஜைகள் 1095 பேரும் பாகிஸ்தானிய பிரஜைகள் 795 பேரும் கைது செய்யப்பட்ட வர்களில்அடங்குவர்.
தொடர்ந்து உள்நாடு மற்றும் அந்நியநாட்டு முதலாளிகள் 267 பேரை யும் நாங்கள் கைது செய்துள் ளோம் என்றார் கைருல்.
கடந்தாண்டு குடிநுழைவுத் துறையினர் 17536 நடவடிக்கை களில் மேற்கொண்டதில் கைதானவர்களில் அதிகபட்சம் பேர் இந்தோனேசியர்கள் என்று பதிவாகியுள்ளது எனவும் கைருல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =