18 வாடிக்கையாளர் உபசரிப்பு பெண்கள் கைது

இங்குள்ள ஜாலான் பர்மாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத் துறையினர் சோதனை மேற்கொண்ட போது தப்பியோட முயன்ற வாடிக்கையாளர் உபசரிப்பாளர்களாக பணியாற்றிய 18 அந்நிய பெண்கள் சுற்றி வளைக்கப்பட்டனர்.
இந்த உபசரிப்பு பெண்கள் தங்கள் வாடிக்கையாளர் களிடம் உல்லாசமாக இருந்த போது நள்ளிரவு 12.15 மணிக்கு சுற்றிவளைக்கப்பட்டனர் என்று பினாங்கு மலேசிய குடிநுழைவு இலாகாவின் இயக்குனர் முகமட் ஹூஸ்னி மாஹ்முட் கூறினார்.
இந்த அந்நிய பெண்கள் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாக கடந்த சில மாதங்களாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற் கண்ட சோதனை மேற்கொள் ளப்பட்டது என்றார் முகமட் ஹூஸ்னி.
இந்த பொழுது போக்கு மையம் 4ஆவது மாடியில் அமைந்திருந்தது அமலாக்க அதிகாரிகளின் வருகை குறித்த தகவல் வாடிக்கையாளர் உபசரிப்பு பெண்மணிகளுக்கு கிடைப்பதற்கு இலகுவாக இருந்தது. எனினும் குடிநுழை வுத்துறையினர் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு ரகசிய வழியில் தப்பியோட முயன்றவர்களை சுற்றி வளைத்தனர்.
கைதானவர்களில் 16 பேர் தாய்லாந்து நாட்டவர்கள், இருவர் லாவோஸ் நாட்டவர்கள் ஆவர். இவர்கள் சுற்றுப் பயணி கள் விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து குடிநுழைவுத்துறை, சட்டம் 1963 விதிமுறை 39(பி)யின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 16 =