18 வயதானோருக்கு வாக்குரிமை வழங்க அரசு முன்னுரிமை


18 வயதானோருக்கு வாக்குரிமை வழங்க அரசு உறுதியாக இருப்பதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட அச்சட்டத்தை விரைவுபடுத்த அரசு ஆவண நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
அது சம்பந்தமாகத் தேர்தல் ஆணையம் சட்ட விவகாரங்கள், தொழில்நுட்ப காரியங்கள் உட்பட மென்பொருள் முதலியவற்றைத் தயாரிக்கும் பணியில் விரைவாக ஈடுபடும் என்று தக்கியுடின் தெரிவித்தார்.
பல தவிர்க்க முடியாத காரணங்களினால் அத்திட்டம் இவ்வாண்டு செப்டம்பருக்குள் பூர்த்தி அடைய வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையர் அப்துல் கனி சாலே தெரிவித்ததை அடுத்து, அமைச்சரவை இம்முடிவை எடுத்துள்ளது.
தேர்தல் நடைமுறை, கட்டமைப்பு வசதிகள், மனிதவள எண்ணிக்கை, எம்சிஓ வரைமுறை போன்ற காரியங்களில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதால் சிக்கல் எழுந்துள்ளதை அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தக்கியுடின் தெரிவித்தார்.
நடமாட்டக் கட்டுப்பாடு தடையினால், தேர்தல் ஆணையம் பல வேலைகளைச் செய்ய சிக்கல் ஏற்பட்டுள்ளது எனினும், 18 வயதான இளைஞர்களுக்கு வாக்குரிமை தர அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தல், மாநிலத் தேர்தல்கள், இடைத்தேர்தல் போன்றவற்றில் வாக்களிக்க வாய்ப்பு வருமென்றும் தக்கியுடின் தெரிவித்தார்.
கடந்த மாதம் பெர்சே 2.0 அமைப்பு, கடந்த ஈராண்டுகளாகத் தேர்தல் ஆணையம் என்ன செய்தது என்று கேள்வியை எழுப்பியதோடு, தேர்தல் ஆணையம் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, இளைஞர்களின் வாக்குரிமையைத் தடுக்க முனைந்துள்ளாதா ஏன்ற கேள்வியை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =