15,000 மூசாங் கிங் டுரியான் மரங்கள் அழிப்பு அராஜகச் செயல்


  பகாங், ரவூப், பத்து தாலாம் வனத்தில் 100 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மூசாங் கிங் டுரியான் பழ மரங்களை முற்றாக அழித்துள்ள செயலானது அராஜகம் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
  அவ்விடத்தில் 20 ஆண்டுகளாக அம்மரங்களைப் பயிரிட்டு வருமானத்தைப் பெற்று வந்த விவசாயிகள், அதனைக் கண்டு பெரும் கவலையடைந்திருப்பதாக ‘மூசாங் கிங் கூட்டமைப்பான சம்கா தெரிவித்து, அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.
  அந்த அமைப்பின் தலைவர் வில்சன் சாங் கூறும்போது, பகாங் வனவிலாகா தங்களின் வாழ்வை சிதைத்து அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
  வனவிலாகாவுக்கு எதிராக தாங்கள் நீதிமன்ற வழக்கைத் தாக்கல் செய்து தடையுத்தரவைப் பெற்றிருக்கும் வேளையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வனவிலாகா மரங்களை அழித்திருக்கும் செயலானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலென அவர் குற்றம் சாட்டினார்.
  அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த டுரியான் மரங்கள் விவசாயிகளுக்கு வருமானத்தைத் தந்து கொண்டிருந்த வேளையில், அவற்றை அழித்து நாசமாக்கிய பின்னர், எங்களின் வாழ்வு சிதைந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
  பத்து தாலாம் ரிசர்வ் நிலத்தில் இருந்த 15,000 மூசாங் கிங் டுரியான் மரங்களை கட்டிலாகா அழித்துத் தரை மட்டமாக்கி இருக்கிறது.
  அந்த மரங்களின் அழிப்பானது ஓப்ஸ் பாமா எனும் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்தத் திட்டம் ஜூலை 3ஆம் தேதி 100 அதிகாரிகளின் உதவியோடு தொடங்கப்பட்டதாக பகாங் வனவிலாகா துணை அமலாக்க இயக்குநர் நோர் அமாட் தெரிவித்தார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  6 + three =