15 சிறு தோட்ட விவசாயிகளுக்கு உதவித் திட்டம்

கோல லங்காட் மாவட்ட ரீதியில் சிறு தோட்டங்களில் விவசாயம் மேற்கொண்டு வரும் 15 பேர் மாவட்ட விவசாய இலாகா தற்போது அறிமுகப் படுத்தியுள்ள உதவித் திட்டங்களைப் பெறவிருக்கின் றன ர். இந்த நிலத்திற்கான உரங்கள் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் நிலம் வளப்பம் பெறும் மற்ற சில உதவிப் பொருள்களை இத் திட்டத்தின் மூலம் இங்கு ள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று விவசாய இலாகா அதிகாரி பாரிட் தெரிவித்தார். சுங்கை புவாயா ஹூஜோங் கிராமத்தின் இந்தியர் பிரதிநிதி வாசுவுடன் இந்திய ர்கள் பயிரிட்டுள்ள நிலப் பகுதிகளை நேரில் பார்வையிட வந்திருந்த அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். இதற்கான மனுபாரங்களைப் பூர்த்தி செய்து மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் ஒப்புதல் கையெழுத்துடன் தமது அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். மனுபாரங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டப் பின்பு இந்த உதவிகளை இந்திய விவசாயிகள் பெறுவர் என்று அவர் கூறினார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மனு பாரங்களில் விவசாயிகளின் முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் அது விவசாய இலாகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என்று பொதுநல சேவையாளருமான வாசு தமிழ் மலரிடம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 4 =