15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் முஹிடினே பிரதமர்!

0

15ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர், பெரிக்காத்தான் நேஷனலின் தலைவரான முஹிடின் யாசினே பிரதமராவதற்கு அதன் உறுப்புக் கட்சிகள் முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

நேற்று புத்ரா ஜெயாவில் நடந்த கூட்டணியின் கலந்தாய்வில் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டான்ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் மாசிங் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹராப்பானில் பிரதமர் பதவிப் போட்டியில் துன் மகாதீர், அன்வார் இப்ராஹிம் மற்றும் ஷாபி அப்டால் போன்றோர் இழுபறியில் இருப்பதைப் போலன்றி, பெரிக்காத்தானில் பிரதமர் பதவி சம்பந்தமாக ஒரு தெளிவான முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். தங்களின் பொது எதிரியே ஜசெக தான் என்றும் மசீச உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தைப் பேண வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், பெர்சத்துவும் பாஸ் கட்சியும் சரவாக்கில் கிளைகளை வைத்திருந்தாலும், விரைவில் வரவிருக்கும் சரவாக் மாநிலத் தேர்தலில் பெர்சத்து, பாஸ் கட்சிகள் போட்டியிடாது என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =