15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் வேட்பாளராக அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கவுள்ளார்.நேற்று இங்கு நடந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தில் ஏகமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.அதே வேளையில் எந்தவொரு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒத்துழைக்கவும் தாங்கள் தயாராக இருப்பதாக பிகேஆர், ஜசெக, அமானா தலைவர்கள் தெரிவித்தனர். போர்ட்டிக்சன் தீர்மானம்’ என்றழைக்கப்படும் இந்த கூட்டணியின் உள்ளடக்கங் கள், ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் கூட்டணியின் ஆட்சி புரிந்த சாதனைகள் இந்த ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. அதே வேளையில் அவசரகாலத்தை முடிவிற்குக் கொண்டு வரவும் நாடாளு மன்றத்தைக் கூட்டவும் மாட்சிமை தங்கிய மாமன்ன ருக்கு ஆலோசனை வழங்கும் படி பிரதமர் முஹிடின் யாசினை கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தினர். வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் வெற்றியின் மூலமே நாடு எதிர்நோக்கி வரும் கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொள்ள சரியான திட்டங்கள் வகுக்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 10 =