130 குடும்பங்களுக்கு கின்றாரா சட்டமன்றம் உதவி

கோவிட்டால் பல குடும்பங்கள் பொருளாதார ரிதியில் பாதிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் பூச்சோங் கின்றாரா பகுதியில் உள்ள மக்களுக்கு கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸே ஹான் தலைமையில் 130 வசதி குறைந்த குடும்பங்களுக்கு பொருள்கூடைகள் வழங்கப்பட்டன. பூச்சோங் கின்றாரா தமிழ்ப் பள்ளியில் பயிலும் வசதி குறைந்த மாணவர்களின் குடும்பத்திற்கு இந்த பொருளுதவியை அவர் வழங்கினார். மாதம் ஒரு பள்ளிக்கு இது போன்ற உதவியைச் செய்து வருவதோடு, மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறார். இந்த பொருட் கூடையில் மீன், கோழி, மரக்கறி உட்பட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். கின்றாரா ஸூன் 18இல் செயல்படும் கவுன்சிலர் மேகநாதன் இப்பள்ளிக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார். இப்பள்ளியில் பயிலும் 100 மாணவர்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள், முகக் கவசம், கிருமிநாசினி போன்றவற்றை வழங்கியுள்ளார். இப்பள்ளியில் பயிலும் பி 40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பல உதவிகளைச் செய்து வருகிறார். கின்றாரா தமிழ்ப்பள்ளி முன் வாசலில் சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக அப்பள்ளிக்குச் செல்வதற்கு புதிய சாலை ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார் இங் ஸே ஹான். இப்பள்ளிக்கு பல உதவிகளைச் செய்து வரும் இங் ஸேவுக்கும் கவுன்சிலர் மேகநாதனுக்கு பள்ளி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + 13 =