125,000 வெள்ளி மதிப்புடைய கடத்தப்பட்ட சிகரெட்டுகள் பறிமுதல்

0

இவ்வட்டாரத்தில் உள்ள 6 சில்லறை விற்பனைக் கடைகளையும் ஒரு வீட்டையும் காவல்துறையினர் சோதனை செய்ததில் கடத்தப்பட்டதாக நம்பப்படும் 238 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 27 முதல் 35 வயதிற்குட்பட்ட 3 இந்தோனேசியர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் வட்டார காவல்துறைத் தலைவர் உதவி கமிஷனர் ஷம்சுல் அமார் ரம்லி கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் விலை 125,875 வெள்ளி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here