12 டன் கொக்கேய்ன் பிடிபட்டது!

0

பட்டர்வொர்த்தில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்றிலிருந்து 240 கோடி மதிப்புடைய 12 டன் கொக்கேய்ன் போதை பொருளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

செப்டம்பர் 10இல் பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அந்தக் கப்பலில் சோதனையிட்டபோது, நிலக்கரி என குறிப்பிடப்பட்ட பொருளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்தப் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

60 டன் பொருளில் போலீசார் 12 டன் கொக்கேய்னைப் பிரித்து எடுத்தனர். அது பற்றிக் குறிப்பிட்ட போலீஸ் தலைவர் அப்துல் ஹமிட் படோர், இந்தப் போதை பொருள் பறிமுதலின் மூலம் பினாங்கை தளமாக வைத்துப் போதைப் பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டதாகவும் அந்தப் போதை பொருள், சந்தையில் கிலோவுக்கு ரிம. 200,000 வரை விற்கப்படும் என தெரிவித்தார்.

இதில் கைது செய்யப்பட்ட நபர் மீது குற்றவியல் சட்டத்தின் வழி விசாரணை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + three =